நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. இந்த அணையின் மூலம் குன்னூர் பகுதியில் உள்ள 30 வார்டு குடியிருப்பு பகுதிகளுக்கும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது அணையில் 36 அடி கொள்ளளவு தண்ணீர் இருந்து வருகிறது. இந்நிலையில், நகராட்சி அலுவலர்கள் தண்ணீரை சேமிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் பொது மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்தனர். எட்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்பட்டது. தற்போது நாள் முழுவதும் தொடர்ந்து 24 மணி நேரமும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதால் குன்னூர் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.