நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15 முதல் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுமார் 70 இடங்களில் வாட்டர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பேருந்து நிலையம், காமராஜர் சிலை, காட்டேரி பூங்கா உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் வாட்டர் ஏடிஎம் மையங்கள் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் பயன்படுத்தி வந்த ஏடிஎம்கள் ஆரம்பித்த சிலநாட்களிலேயே பழுதடைந்ததால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், உடனடியாக இந்த ஏடிஎம்களை பழுதுபார்த்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,.