நீலகிரி: குன்னூர் அருகே உள்ள பேரட்டி கிராமப்பகுதியில் கரடிகள், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அவ்வப்போது இருந்து வந்த நிலையில் இரண்டுச்சிறுத்தைகள் ஒரே நேரத்தில், குடியிருப்பு அருகே நடமாடி வருவது பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்பவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், அச்சமடைந்துள்ளனர். எனவே, சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:கறவை மாடுகள் வாங்க மானியம் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை