நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாள்தோறும் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் அய்யங்கொல்லி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் புகுந்த 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வீட்டை விட்டு வெளியேறாமல் முடங்கியுள்ளனர்.
இதைதொடர்ந்து தேயிலைத் தோட்டங்களுக்குள் புகுந்த யானைகளை பார்த்து தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் தோட்டங்களுக்கு வந்த யானைகள், குடியிருப்புப் பகுதிக்குள் வருவதால் அதனை துரத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.