ETV Bharat / state

பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யபிரியா கொல்லப்பட்ட வழக்கு...இளைஞர் சதீஷ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு! - SATHYAPRIYA MURDER CASE

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் எனும் இளைஞர் குற்றவாளி என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறையில் உள்ள சதீஷ், ஐகோர்ட், உயிரிழந்த மாணவி சத்யப்பிரியா
சிறையில் உள்ள சதீஷ், ஐகோர்ட், உயிரிழந்த மாணவி சத்யப்பிரியா (Image credits-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 16 hours ago

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் எனும் இளைஞர் குற்றவாளி என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்பவரும் காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில் பெற்றோரின் கடும் எதிர்ப்பால் சதீஷுடன் பழகுவதை பேசுவதை சத்யபிரியா நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.இதனால் இளைஞர் சதீஷ் ஆத்திரம் அடைந்ததாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி கல்லூரிக்குச் செல்ல வழக்கம் போல பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு சத்யபிரியா வந்தார்.

அப்போது அங்கு நின்றிருந்த சதீஷ் கோபத்துடன் சத்யபிரியாவிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். வாக்குவாதம் முற்றியதில் திடீரென யாரும் எதிர்பாரதவிதமாக தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த மின் ரயில் முன்பு சத்யபிரியாவை தள்ளி விட்டார். இதையடுத்து சதீஷ் தப்பி சென்றார். இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட போலீசார் தலைமறைவாக இருந்த சதீஷை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதையும் படிங்க: "லண்டனில் இருந்து திரும்பியபின் என் பாதை தெளிவாக இருக்கின்றது"-சாட்டையடி போராட்டத்துக்குப் பின் அண்ணாமலை பேட்டி!

இந்த வழக்கின் விசாரணை சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு நடைபெற்று வந்தது. சிபிசிஐடி தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சிபிசிஐடி தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட சதீஷூக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். இந்த வழக்கில் கடந்த 24ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை 27ஆம் தேதி (இன்று) அறிவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

அதன்படி இன்று இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஸ்ரீதேவி, "வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது," என தெரிவித்தார். சதீஷூக்கான தண்டனை விவரங்கள் வரும் 30ஆம் தேதி தெரிவிக்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். சென்னையில் பரபரப்பு மிகுந்த பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. குற்றம்சாட்டப்பட்ட சதீஷ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.