நீலகிரி: குன்னூர் பகுதிகளில் கோடைகால வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கடந்த வாரம் முதல் பல்வேறு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த மரங்களும் செடி கொடிகளுக்கும் மளமளவென தீப்பரவி எரிந்தது நாசமானது.
இதில் குன்னூர் அருவங்காடு கேத்தி மலைப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 2 ஏக்கர் பரப்பிலான அரிய வகை செடி, கொடி மரங்கள் எரிந்து நாசமாகின. அங்கு தீயணைப்புத்துறையினர் செல்ல முடியாததால் 8 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்து கொண்டிருந்தது.
இதற்கு தீத்தடுப்பு கோடுகளை வனத்துறையினர் அமைக்காததே தீ பரவக்காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: T23 புலியைப் பிடிக்க செலவிடப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா ?