நீலகிரி மாவட்டம் குன்னுாரில் காவல் துறையினர்கள் கலந்துகொண்ட விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா தலைமை வகித்தாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் முன்னிலை வகித்தாா். அப்போது இவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த காவல் துறையினர்களிடம் பொது இடங்களில் மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது, காவல்நிலையத்திற்கு வருபவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
கூட்டத்திற்கு பிறகு காவல் துறை தலைவர் (மேற்கு மண்டலம்) பெரியய்யாவிடம் செய்தியார்கள் தூத்துக்குடி மாவட்ட உதவி கண்காணிப்பாளர் நீலகிாி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து கேள்வி கேட்டதற்கு அவர் பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றார்.
பின்னா் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உதவி செய்யும் தன்னார்வலர்களை காவல் துறையினர் ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அவர்களுக்கும் காவல் துறையினருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.
ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தடை நீலகிரி மாவட்டத்திற்கும் பொருந்தும். தூத்துக்குடி மாவட்ட உதவி கண்காணிப்பாளர் நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
அதுகுறித்து அரசு உயர் அதிகார்களுக்கு தகவல் அனுப்பியுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக ஆர்வலர்