நீலகிரி: மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு தினமும் காலை 7.10 மணிக்கு புறப்படும் மலை ரயில் 10.30 மணியளவில் குன்னூர் வந்து சேர்வது வழக்கம். இந்நிலையில் மலை ரயில் பாதையில் ஹில்குரோவ், ரண்ணிமேடு இடையே இன்று காலை சிறிய அளவிலான பாறைகள் தண்டவாளத்தில் விழுந்தது.
இதன் காரணமாக, தண்டவாளத்தில் இருந்த பற்கள் பழுதானது, மலை ரயில் பாதை ஆய்வாளர் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் பணிமனைப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ரயில் பாதையில் உடைந்து கிடந்த சிறியப் பாறைகளை அகற்றினர்.
பின்னர் பழுதான தண்டவாளப் பற்கள் மாற்றப்பட்டு, மலை ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. இதன் காரணமாக இரண்டு மணி நேரம் தாமதமாக மலை ரயில் ஹில்குரோவ் ரயில் நிலைத்தில் இருந்து குன்னூர் புறப்பட்டு சென்றது. அப்போது ரயில் பயணிகள் உணவு மற்றும் குடிநீர் இன்றி தவித்தனர்.
இதையும் படிங்க: "தி ஈகிள் இஸ் கம்மிங்" - ட்விட்டரில் கம்பேக் கொடுக்கும் ட்ரம்ப்!