நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுப்புறப் பகுதிகளில் சிறுத்தை, காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வனப்பகுதியிலிருந்து உணவைத் தேடி வரும் வன விலங்குகள் அவ்வப்போது தேயிலைத் தோட்டம் , அருகிலுள்ள பாறைகளில் ஓய்வெடுக்கிறது.
இந்நிலையில் இன்று(ஏப்ரல்.21) மாலை குன்னூர் அட்டடி கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டம் அருகே பாறையின் மீது சிறுத்தை ஒன்று ஓய்வெடுத்தது.
சுமார் 3 மணிநேரம் ஒரே பாறையில் ஓய்வெடுத்த சிறுத்தையை அப்பகுதி மக்கள் புகைப்படம் எடுக்க் சாலையில் திரண்டனர்.