ETV Bharat / state

’மாஸ்க் இல்லையா,  6 மாத சிறை தண்டனை’ - நீலகிரியில் கட்டுப்பாடு - the nigiris district collector

நீலகிரி: "பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்" என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்னசென்ட் திவ்யா
இன்னசென்ட் திவ்யா
author img

By

Published : Mar 11, 2021, 7:26 PM IST

நீலகிரி மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று, கடந்த சில நாள்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவதாலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது குறைந்து வருவதாலும் மீண்டும் கரோனா அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, “நீலகிரியில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது தற்போது குறைந்து வருகிறது. அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வந்தால் கட்டுப்படுத்த முடியாது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் பேட்டி

அதிலும் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நேரம் என்பதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது பேரிடர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்படும்.

மேலும் அதனைக் கண்காணிக்க 20 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வீதி மிறலில் ஈடுபட்டவர்களிடமிருந்து இதுவரை 30 லட்சத்து, 68 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.