ETV Bharat / state

அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு! - நீலகிரி

நீலகிரி: உதகைமண்டலம் தாலுகாவில் உள்ள நான்கு அரசுப் பள்ளிகளை மூட பெற்றோர்கள், மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு
author img

By

Published : Jun 6, 2019, 10:35 PM IST

நீலகிரி மாவட்டத்தில் 153அரசுப் பள்ளிகள் உள்ளன. இந்நிலையில் உதகை தாலூகாவில் உள்ள தங்காடு அரசு நடுநிலைப்பள்ளி, டி.ஓரநல்லி ஆரம்ப பள்ளி, கெத்தை ஆரம்ப பள்ளி, காந்திபுரம் ஆரம்ப பள்ளி ஆகிய பள்ளிகள் தற்போது 2019ஆம் கல்வி ஆண்டில் மூட நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. இதனால் அந்தப் பள்ளியில் படித்த மாணவ-மாணவிகள் பலகிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பல சிரமங்களை கடந்து இந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் பள்ளி வரும்நிலையில் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே பள்ளிகள் மூடப்பட்டுள்ளது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மாற்றப்பட்டுள்ள பள்ளிகள் வனவிலங்குகள் நடமாடும் பகுதி என்பதால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப யோசித்து வருகின்றனர். இதனால் பள்ளிகள் மூடும் முடிவை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

  உதகை                    PKG                           06-06-19

நீலகிரி மாவட்டத்தில் 4 பள்ளிகள் மூட நடவடிக்கை எடுத்துள்ளதால் பரப்பரப்புபள்ளிகளை மீண்டும்  திறக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

நீலகிரி மாவட்டதில் அரசு ஆரம்ப பள்ளிகள், நடுநிலைபள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகள் என 153 பள்ளிகள் உள்ளன. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் கல்வி மாவட்ட உதகை தாலூக்கா பகுதியிலுள்ள தங்காடு அரசு நடுநிலைப்பள்ளி, டி.ஓரநல்லி ஆரம்ப பள்ளி, கெத்தை ஆரம்ப பள்ளி, காந்திபுரம் ஆரம்ப பள்ளி ஆகிய பள்ளிகள் தற்போது 2019-ம் கல்வி ஆண்டில் மூட நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. இங்கு பயிலும் மாணவ மாணவிகள் வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யபட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்து பள்ளிக்கு செல்லும் அவலம்  ஏற்பட்டுள்ளது. மலை மாவட்டம் என்பதால் பள்ளி மாணவர்கள் நடந்து செல்ல மிகவும் சிரமபட்டு வருகின்றனர். கல்வி என்பதால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வரும் தருவாயில் பள்ளிகள் மூடபட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்காடு அரசு நடுநிலைப்பள்ளி, டி.ஓரநல்லி ஆரம்ப பள்ளிகள் உள்ள மாணவர்கள் அருகில் உள்ள கன்னோரி மந்தனை பள்ளிக்கும், உதகைகோவை மாவட்டம் எல்லை பகுதியான கெத்தை அரசு ஆரம்ப பள்ளியானது மஞ்சூர் அருகே உள்ள கீழ்குந்தா பகுதிக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது. கெத்தை பள்ளியிலிருந்து கீழ்குந்தா பள்ளிக்கு மாணவர்கள் சென்று வரவேண்டும் என்றால் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வனவிலங்கு அச்சுருத்தல் உள்ள கெத்தை பள்ளியில் படித்த மாணவர்களின் கல்வியானது கேள்விகுறியாகியுள்ளது. இதனால் பெற்றோர்கள் பள்ளி மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே தமிழக அரசு மூட நடவடிக்கை எடுத்துள்ள 4 பள்ளிகளை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி : திப்பன் - கிராம மக்கள்

      லத்திப் - கிராம மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.