தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், கரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இன்று (ஜூன் 14) முதல் மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் பா.ஜ.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகளும், நிர்வாகிகளும் கையில் பதாகைகள் ஏந்தி, ’மதுக்கடையை திறக்க வேண்டாம்’ என்று கோஷமிட்டனர். இதில், மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், குன்னூர் மண்டல் தலைவர் ராஜ், பாஜக மாவட்ட துணை தலைவர் பாப்பண்ணன், பாஜக வர்த்தாக அணி செயலாளர் சம்பத் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வறுமையிலும் கரோனா நிதிக்கு தங்க செயின்: முதலமைச்சரை ஈர்த்த மனு!