நீலகிரி: கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. மேலும், நோய்த்தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் குன்னூர் மற்றும் ஊட்டி அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், குன்னூர் டான் டீ அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் டான் டீ அலுவலகம் மூடப்பட்டு, அங்கு பணிபுரிபவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நோய் தொற்று ஏற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குன்னூர் நகராட்சி ஊழியர்கள் அலுவலகத்தை சுற்றி கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிஙக: இளம்பெண் 25 பேரால் கூட்டுப்பாலியல் வன்புணர்வு