ETV Bharat / state

கூரியர் நிறுவனத்தின் பூட்டை உடைத்து திருட்டு! - கூரியர் நிறுவனத்தில் திருடியவர் கைது

குன்னூரில் கூரியர் நிறுவனம் ஒன்றின் பூட்டு உடைத்து 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியதாக இருவரை காவலர்கள் கைதுசெய்தனர்.

thieves arrested who theft in courier office  thieves arrested who theft in courier office at nilgris  nilgris news  nilgris latest news  thieves arrested in kunnur  நீலகிரி செய்திகள்  திருட்டு  நீலகிரி குன்னூரில் கூரியர் நிறுவனத்தில் திருட்டு  கூரியர் நிறுவனத்தில் திருட்டு  கூரியர் நிறுவனத்தில் திருடியவர் கைது
கூரியர் நிறுவனத்தில் திருட்டு
author img

By

Published : Jul 19, 2021, 11:50 AM IST

நீலகிரி: குன்னூர் பெட்போர்டு பகுதியில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில், கடந்த 11ஆம் தேதி பூட்டு உடைக்கப்பட்டு, ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் திருடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காவல் துணைக்கண்காணிப்பாளர் தலைமையில், நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு; குன்னூர் உட்கோட்ட குற்றப்பிரிவு; அப்பர் குன்னூர் காவல் துறையினர் அடங்கிய 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அங்கு பணி புரிந்த பழைய நிறுவன ஊழியர்களை விசாரணை நடத்தினார்கள்.

இதில் ஏற்கனவே இங்கு பணிபுரிந்த உபதலையை சேர்ந்த ராஜேஷ் (30) என்ற நபருடன், குன்னூர் அம்பேத்கார் நகரை சேர்ந்த ஜான் (29) என்ற நபரும் சேர்ந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதையடுத்து இரு கொள்ளையர்களும் கைது செய்த காவல் துறையினர், அவர்களை குன்னூர் நீதிமன்றம் முன்நிறுத்தினர். அப்போது கொள்ளையர்கள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தனியார் நிறுவன காவலாளி கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.