ETV Bharat / state

அரசுப் பள்ளியில் திருட்டுப் பொருள்களுடன் தங்கியிருந்த நபர் - Police investigation

நீலகிரி: அரசுப் பள்ளியின் பூட்டுகளை உடைத்து பள்ளியறையில் கூர்மையான ஆயுதங்கள், திருடப்பட்ட இருசக்கர வாகனம், மடிக்கணினிகளுடன் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்கியிருந்துள்ளார்.

thief who stayed at the Government School in Nilgiris

author img

By

Published : Aug 27, 2020, 7:55 AM IST

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை பகுதியில் உள்ளது, அரசு உயர்நிலைப்பள்ளி. சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கும் இந்தப் பள்ளியைச் சுற்றி பாதுகாப்பு சுற்றுச்சுவர், இரவு காவலர் இல்லாத நிலையில் பாதுகாப்பு சம்மந்தமான பணிகளை செய்து தரக்கூறி, அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 25) மாலை பள்ளியின் மேல்தளத்தில் ஒரு சத்தம் வந்த நிலையில் பள்ளியின் இளநிலை உதவியாளர் மோகன் மேல் தளத்திற்குச் சென்று பார்த்தார். அப்போது ஒரு பள்ளி அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த பள்ளி அறையைத் திறந்து பார்க்கும்போது வேறொரு கதவு வழியாக அடையாளம் தெரியாத நபர் தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கு புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தேவர்சோலை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். ஆய்வில் அந்த நபர் பல இடங்களில் திருடிய மடிக்கணினிகள், கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் பள்ளியின் பின்புறம் பார்க்கும்போது, கடந்த வாரம் கூடலூரில் திருட்டுப்போன ஒரு இருசக்கர வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து அனைத்துப் பொருட்களையும் கைப்பற்றிய காவல் துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை அமைத்து அடையாளம் தெரியாத நபரைத் தேடி வருகின்றனர். தற்பொழுது கரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் அந்த நபர் திருடப்பட்ட பொருட்களுடன் பள்ளியை உடைத்து பதுங்கி இருந்தாரா? அல்லது வேறு கும்பல்களுடன் தொடர்பு உள்ளதா? என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், 'நல்வாய்ப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் இல்லை. மேலும் இந்தப் பள்ளியைச் சுற்றி அதிக அளவில் வீடுகள், மக்களின் நடமாட்டம் குறைவாக இருக்கிறது. இப்பள்ளியின் பாதுகாப்பிற்காக அந்த ஊர் மக்கள் சார்பாக சுற்றுச்சுவர், காவலர் நியமிக்க பல முறை கோரிக்கை வைத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதுபோன்ற சம்பவம் பாதுகாப்புக் குறைபாட்டால் நடந்துள்ளது' எனத் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.