ETV Bharat / state

'இனி வரும் நாட்களில் தடுப்பூசித் தட்டுபாடு இருக்காது' - மாவட்ட ஆட்சி தலைவர்

நீலகிரி: இனி வரும் நாட்களில் தடுப்பூசி தட்டுபாடு இருகாது எனவும், மாவட்டத்தில் படுக்கை, ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்னையும் ஏற்படாது என மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா
மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா
author img

By

Published : Jun 4, 2021, 2:41 AM IST

நீலகிரி மாவட்டம் உதகையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடுவிழாவை மாவட்ட ஆட்சியர் இன்று (ஜூன்.3) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ’’இன்று முதல் மாவட்டத்தில் 1000 மரங்கள் நடவு செய்யப்படும். சோலை மரங்கள் அனைத்தும் தடுப்புசுவர், தடுப்பு வேலிகள் உள்ள இடத்தில் மட்டும் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்படும்.

நீலகிரிக்கு 7,000 கரோனா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதால் அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். இந்த வாரத்திலிருந்து தடுப்பூசிகள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

நமது மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பகுதிகள் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, நோய் தடுப்புப் பணிகள், கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, மாவட்டத்தில் 11 கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், நான்கு அரசு மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாகச் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்.

தற்போது, வரை ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கைகளின் பற்றாக்குறை என பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இ-பாஸ் நடைமுறைக்கு தமிழ்நாடு அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, இ-பதிவு மூலம் நமது மாவட்டத்திற்குள் வரும் நபர்களின் காரணங்களின் உண்மைதன்மையறிந்து அனுமதி வழங்கப்படும். மாவட்ட நிர்வாகம் கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த முழுவீச்சில் பல்வேறு துறை அலுவலர்களை ஈடுபடுத்தி தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். எனவே, தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு முழுமையாக பின்பற்றினால் மட்டுமே நமது மாவட்டம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற முடியும்’’ என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர், வன ஊழியர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்யக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.