நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட தொழிலாளியான ராமகிருஷ்ணன் என்பவரது மகள் கோகிலா (15). இவர் பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் தனது உறவினர்களுடன் பசுந்தலை பறித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கோகிலா உயிரிழந்தார். அவரது சகோதரி ஜீவப்பிரியா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.