நீலகிரி: உதகையிலிருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப் பாதையில் சென்றுகொண்டிருந்த சுற்றுலா வேன் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், டெம்போ ட்ராவலரில் சென்னை ஹெச்சிஎல் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் 18 பேர் பயணித்துள்ளனர். அவர்கள் உதகைக்கு சுற்றுலா வந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உதகை 50 அடி பள்ளத்தில் விழுந்து வேன் விபத்து - பெண் உயிரிழப்பு; 17 பேர் படுகாயம்