நீலகிரி: தற்போது தேயிலைக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குன்னூரில் உள்ள தேயிலை வாரிய தென் மண்டலத்தின் செயல் இயக்குனராக பொறுப்பேற்றுள்ள முத்துகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது தேயிலை விவசாய சங்கங்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டு பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்க இரண்டு அல்லது முன்று நாட்களில் தீர்வு காணப்படும்.
மேலும் தேயிலை தொழிற்சாலைகளில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தேயிலை தொழிற்சாலை நிர்வாகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். மேலும் தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் தேயிலை தூளில் கலப்படம் செய்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை என கூறினார்.
இதையும் படிங்க: குன்னூரில் கடும் பனிமூட்டம்!