இந்திய தேயிலை வாரியம் சார்பில் தேயிலை மேம்பாட்டிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக தேனீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வி துறையுடன் இணைந்து உபாசி அரங்கில் சிறப்பு தேயிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேச்சுப் போட்டி, நடனப் போட்டி என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிறப்பாகச் செயல்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேயிலை வாரியம் சார்பாக சான்றிதழ், ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் பல்வேறு வகையான தேயிலை வகைபாடுகள் அவற்றின் சிறப்பு குணங்கள், மருத்துவ குணங்கள் குறித்து முகாமில் தேயிலை வாரிய அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியை தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ரயில்வே லெவல் கிராஸிங் கேட் ஒத்திகை நிகழ்ச்சி - ரயில்வே துறை!