நீலகிரி: உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்க மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உதகைக்கு வருகை தந்தார். கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் வந்த அவர், ஏடிசி பகுதியில் பேசும்போது, தமிழ் மொழி பழைமையான மொழி, உலகிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி தமிழ்தான். தமிழ்நாடு வளர்ச்சி பெறவேண்டிய மாநிலம், எனவே, தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் மத்தியில் மோடி ஆட்சியும் அமையவேண்டும்.
கரோனா காலத்தில் பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டார். நமது நாட்டு விஞ்ஞானிகள் கரோனாவிற்கு புதிய தடுப்பூசி கண்டுபிடித்ததன் மூலம் 72 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா முதலமைச்சரின் தாய் குறித்து விமர்சித்துப் பேசியதை நான் கண்டிக்கிறேன். இது தமிழ்நாடு பெண்களை விமர்சிப்பதற்கு ஒப்பாகும்.
புதிய வேளாண் சட்டங்களால், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். விவசாயிகள் போல் மீனவர்களுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இலங்கை சென்ற பிரதமர் மோடி இலங்கையில் போரினால் வீடுகள் இழந்த தமிழர்களுக்காக 27ஆயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளார்.
நீலகிரியில் வாழும் படுகர் இன மக்களைப் பழங்குடியின பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தேயிலைக்கு குறைந்த பட்ச விலையாக ரூ. 30 நிர்ணயம் செய்யப்படும். உதகையை உலகத்தர சுற்றுலா தலமாக மாற்றாவும், தகவல் தொழில்நுட்ப பூங்கா தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: கோவையில் பரப்புரையில் ஈடுபட்டுவரும் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்