ETV Bharat / state

'புதியன விரும்பு' 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை சிறப்பு வகுப்புகள்! - அரசு பள்ளி

புதியன விரும்பு என்ற தலைப்பில் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு சிறப்பு கோடை வகுப்புகளை பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவங்கி வைத்தார்.

puthiyana virumbu
புதியன விரும்பு
author img

By

Published : May 24, 2023, 10:37 AM IST

நீலகிரி: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவியர் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரமான கல்வி மற்றும் வெளி உலகத்தை அறிந்து கொள்ளும் வகையில் அதிநவீன வசதிகளை பள்ளி கல்வித்துறை மேம்படுத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக 9 ஆம் வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற்று 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு செல்லும் மாணவ, மாணவிகளின் தனித் திறமைகளை மேம்படுத்திட ஆண்டு தோறும் புதியன விரும்பு என்ற தலைப்பில் சிறப்பு கோடை வகுப்புகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.

இந்நிலையில் 2 ஆம் ஆண்டாக பள்ளி கல்வித்துறை சார்பில் உதகை லாரன்ஸ் பள்ளியில் புதியன விரும்பு 2023 என்ற தலைப்பில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கென 5 நாள் பயிற்சி முகாமினை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பறை இசையுடன் உதகை சர்வதேச தனியார் பள்ளியில் துவக்கி வைத்தார்.

இந்த பயிற்சி முகாமில் 38 மாவட்டங்களை சேர்ந்த 1140 பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த பயிற்சி முகாமில் மாணவர்களுக்கென தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் கலைகள், இலக்கியம், சமூக விழிப்புணர்வு உள்ளிட்ட 15 வகையான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளும், இலக்கிய ஆளுமை வாதிகளை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, “தமிழ்நாட்டில் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், குறிப்பாக மாணவிகள் பயிலும் அரசு பள்ளிகளில் கழிவறை வசதிகள் மேம்படுத்தப்பட்டும், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருவதாக கூறினார்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்தும் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதலமைச்சர் வேலூரில் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 185 ஊராட்சிகளில் ஒவ்வொரு பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். இதனைத் தொடர்ந்து, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நபார்டு நிதியின் கீழ் விரைவில் பள்ளி கட்டடங்கள் நவீன மயமாக்கப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காதர்லா உஷா, மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி அம்ரித், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர். கணேஷ் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இறுதியாக தோடர் பழங்குடியின மக்கள் கலாச்சார உடை அணிந்து பாரம்பரிய நடனமாடினர். இதனை அங்கிருந்த பள்ளி மாணவ, மாணவிகள், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உட்பட அரசு துறை அதிகாரிகள் அனைவரும் கண்டு ரசித்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பில் மாற்றம் உள்ளதா? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.