கோடை சீசனை முன்னீட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் கண்டுகளிக்க கோடை விழா நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்ச்சியான 17ஆவது ரோஜா கண்காட்சி உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் இன்று (மே14) தொடங்கியது.
2 நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி ஐக்கிய அரபு அமீரக (யூஏஇ) மன்னர் உயிரிழப்பு காரணமாக எளிமையாக தொடங்கியது. இதனையடுத்து வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் மலர் அலங்காரங்களை பார்வையிட்டனர்.
சுமார் ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பல்வேறு வடிவங்கள் கொண்ட ரோஜா மலர்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன. சிறப்பு அம்சமாக 31 ஆயிரம் ரோஜாக்களை கொண்டு 15 அடி உயரத்தில் மர வீடு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 50 ஆயிரம் மலர்களை கொண்டு பியானோ, மஞ்சள் பை, பழங்கால பிளிம் ரோல், திண்டுக்கல் பூட்டு உள்ளிட்ட பல்வேறு உருவங்கள், குழந்தைகளை கவரும் விதமாக ரோஜா மலர்களால் கார்ட்டூன் கதாபாத்திர வடிவமான மோட்டு பட்லு, மான், ப்யானோ மற்றும் பனிமனிதன் போன்ற வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ரோஜா கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் புதிய திட்டமான மீண்டும் மஞ்சப்பை திட்டத்திக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மஞ்சப்பை போன்ற வடிவங்களும் மஞ்சள் ரோஜாக்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. வடிவமைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வரும் நிலையில் திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்ட தோட்டக்கலைத் துறையினரால் ரோஜா மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதில் ஆப்பிள், கப்பல் போன்ற பல்வேறு ரோஜா மலர் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்றொரு சிறப்பம்சமாக உலகத்தில் உள்ள 4600 ரோஜா மலர் ரகங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விபத்துக்குள்ளான சுற்றுலா வாகனம் - 17 பேர் படுகாயம்!