மத்திய அரசு விவசாயப் பயிர்களுக்கான உரங்களின் விலையை தனியார் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என அறிவித்தது. இதனால் உரங்களின் விலை மூட்டை ஒன்றுக்கு 300 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நீலகிரியில் மலை காய்கறிகளை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு மானிய விலை உரங்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உதகையில் உள்ள தனியார் உரக்கடைகளில் பகிரங்கமாக மானிய விலை உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக 975 ரூபாய்க்கு விற்க வேண்டிய ஒரு மூட்டை காம்ப்ளக்ஸ் உரம் ஆயிரத்து 125 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இச்சூழலில், ”மானிய விலை உரங்களை இது போன்று வெளி சந்தையில் விற்பனை செய்யப்படுவதை வேளாண் துறையினர் கண்காணிக்க வேண்டும். ஆனால் அவர்கள் கண்டுகொள்வதில்லை” என அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: குமரியில் பூக்கள் விலை கடும் உயர்வு!