கரோனோ பாதிப்பின் எதிரொலியால் நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்கள் மூடப்பட்டன. இதில் குன்னூரிலுள்ள சிம்ஸ் பார்க், காட்டேரி பூங்கா, லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் போன்ற சுற்றுலா மையங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும் கரோனா வைரஸ் குறித்து வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மாவட்டங்களிலுள்ள தங்கும் விடுதியில் உள்ளவர்கள் அனைவரும் வெளியேறவும், உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நுழையும் அனைத்து பேருந்துகளும் சோதனை சாவடிகளிலும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், சோதனைக்குட்படுத்தபட்டும் பிறகு அனுமதிக்கப்படுகின்றன. உணவகங்களில் தூய்மையை பேணிக்காக்க வேண்டும் என நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்புகள் குறித்து பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன - எஸ்.பி. வேலுமணி