நீலகிரி மாவட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உள்நாடுகளில் விற்பனை செய்யப்படுவது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நீலகிரியில் விளைவிக்கப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் ஒரு கிலோவுக்கு ரூ.400 முதல் 500 வரை விலை கிடைத்தது.
இதற்கிடையே கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் வெளிமாவட்டங்களுக்கு வாகனங்கள் செல்வது குறைந்துள்ளன.
அதன் காரணமாக ஸ்ட்ராபெர்ரி பழங்களை வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குன்னூர் அருகே கரும்பாலம் பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் ஸ்ட்ராபெர்ரி பயிரிடப்பட்டுள்ளது. அறுவடைக்குத் தயாராகியும் பழங்கள் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்ப முடியாமல் உள்ளன.
இதனால் ஸ்ட்ராபெர்ரி ஒரு கிலோ தற்போது ரூ.100-க்கு விற்பனை ஆகிறது, விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாலும் வெளிமாவட்டங்களுக்கு கொண்டுசெல்ல முடியாததாலும் வாகனங்களில் வைத்து கூவி கூவி விவசாயிகள் விற்கின்றனர்.
இதையும் படிங்க: ’கரோனா வர்க்க ரீதியான பாகுபாடு காட்டவில்லை: விளைவுகள் வர்க்கத்தைப் பிரதிபலிக்கிறது’