நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் ஆண்டு தோறும் மாணவிகளுக்கு விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற விளையாட்டு தினத்தில், மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் கராத்தே, நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், தேசிய மாணவர் படை அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.
இந்நிகழ்ச்சியில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், மாணவிகள் ஒருவொருக்கொருவர் மேல் நின்று சாகசம் செய்தனர்.
அப்போது, உயரத்தில் இருந்த மாணவியின் கையில் கொடுக்கப்பட்ட தேசிய கொடி தலைகீழாக இருந்துள்ளது. இதனைக் கண்ட மற்றொரு மாணவி, கொடியை ஏந்தவேண்டாம் என கூச்சலிட்டுள்ளார். இருந்தபோதிலும் இதனை அறியாத மாணவி தேசிய கொடியை தலைகீழாக பிடித்துள்ளார்.
தேசிய கொடியை மாணவி தவறுதலாக தலைகீழாக ஏந்தியது, நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் சற்று நேரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பல்வகை திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் - துணைவேந்தர் பேச்சு