நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே டிசம்பர் 11ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதிக்குள் அடுத்தடுத்து மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து அப்பகுதியில் சுற்றித்திரியும் யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர் முடுக்கிவிடப்பட்டனர்.
இந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மருத்துவர் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். தற்போது வனத்துறையினர் யானையை சுற்றி வளைத்து அதனை பிடிக்க தயார் நிலையில் உள்ளனர்.
யானையை பிடிக்க தீவிரம் காட்டும் வனத்துறையினர்
மஸ்து (இனப்பெருக்க காலத்தில் யானைகளுக்கு பாலுணர்வு மிகுவதால் ஏற்படும் தீவிர நிலை) ஏற்பட்ட நிலையில் பெண் யானைகளுடன் சேரம்பாடி அடுத்துள்ள கோஸ்லாண்ட் சப்பந்தோடு பகுதியில் நிற்கும் அந்த யானையை பாதுகாப்பான முறையில் பிடிக்க மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கியுடன் வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். சேரங்கோடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கும்கி யானைகள், காட்டு யானை நிற்கும் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இதையும் படிங்க: தந்தை, மகனை கொன்ற யானையை பிடிக்கும் பணி தீவிரம்