நீலகிரி மாவட்டம் குன்னூரில் மதிப்புக்கூட்டப்பட்ட ஸ்பெஷலட்டி தேயிலை தூள் தயாரிப்பது, சந்தைப்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.
தென்னிந்தியத் தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி, வாரியார் துணைத் தலைவர் குமரன் ஆகியோர் தலைமை வகித்து சிறப்பு தேயிலை தூள் தயாரிப்பு, மேம்படுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினர்.
இதைத்தொடர்ந்து நடந்த கண்காட்சியில் மதிப்பு கூட்டப்பட்ட சிறப்பு தேயிலை தூள்களான கிரீன் டீ, ஒயிட் டீ உள்பட சிறந்த தரமான தேயிலை தூள்கள் இடம்பெற்றன. இதில் ஒரு கிலோவுக்கு ரூபாய் 1000 முதல் 40,000 ரூபாய் மதிப்பிலான சிறப்பு தேயிலைத் தூள்கள் இடம்பெற்றிருந்தன.
இதன் தயாரிப்புகள் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஓட்டல், மருத்துவமனை உரிமையாளர்கள், தேயிலை விவசாயிகள், உற்பத்தியாளர்கள் என பலர் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பாலியல் தொழிலுக்கு வர மறுத்த திருநங்கையின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்!