Soldiers take oath: நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சி பெறும் வீரர்கள் நாட்டின் பல இடங்களுக்குப் பணிபுரிய அனுப்பப்படுகின்றனர்.
இம்முகாமில் 46 வாரங்கள் பயிற்சி பெற்ற 132 பேர், ராணுவ வீரர்களாகப் பணிபுரிய உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 24) வெலிங்டன் பேரக்ஸில் நடந்தது.
பகவத் கீதை, பைபிள், குரான் ஆகிய புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது ராணுவ வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ராணுவப் பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் ஏற்றுக் கொண்டார்.
பயிற்சியில் சிறந்து விளங்கிய 10 வீரர்களுக்குப் பதக்கம் வழங்கப்பட்டது. இரண்டு பயிற்சியாளர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலி - கமல் ஹாசன்