நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் பல்வேறு வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் உள்ளன. இதில், ஒரு ஏடிஎம் மையத்துக்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. பாம்பு இருந்தது தெரியாமல் மையத்துக்குள் வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். உள்ளே சென்ற பிறகு பாம்பைக் கண்ட அவர், அலறியடித்து மையத்திலிருந்து வெளியேறியிருக்கிறார்.
பின்னர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், மையத்தினுள் புகுந்த பாம்பைப் பிடித்தனர். இதையடுத்து பாம்பை சரவண மலை வனப்பகுதிக்குள் விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சாரைப் பாம்பை வெட்டி கோயில் வேல் கம்பியில் குத்திய குடிமகன்! நடந்தது என்ன?