உலகை உலுக்கும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதையடுத்து தற்போது ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு அண்டை மாநிலம், மாவட்டங்களிலிருந்து வருபவர்களை ஏழு நாள்கள் தனிமைப்படுத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நீலகிரிக்கு இ பாஸ் அனுமதியுடன் வருபவர்கள் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை பர்லியார் சோதனைச் சாவடியில் முழு சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சென்று வந்த 21 பேர் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதையடுத்து கூடுதலாக மக்கள் வருகை தருவதால் அவர்களை தங்க வைக்க குன்னூர் தனியார் கல்லூரியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களை ஏழு நாள்கள் தங்க வைத்து அதன்பின் வீடுகளுக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் அங்கு சுகாதார துறை அலுவலர்கள் அடிப்படை மருத்துவ, உணவு வசதிகள் ஏற்பாடு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மிரட்டும் பறக்கும் படை குழுவினர் - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்