ETV Bharat / state

மீண்டும் ரோஜா கண்காட்சி ரத்து: மக்கள் இல்லாமல் பொலிவிழந்த பூக்கள்! - rose exhibition canceled for the second time

நீலகிரி: உதகை அரசு ரோஜா பூங்காவில் நடக்கவிருந்த பிரசித்தி பெற்ற 17ஆவது ரோஜா கண்காட்சி கரோனா ஊரடங்கால் 2ஆவது ஆண்டாக ரத்தாகியுள்ளது. அங்கு பூத்துள்ள லட்சக்கணக்கான ரோஜாக்கள் பார்வையாளர்களின்றி பொலிவிழந்து காணப்படுகின்றன.

மீண்டும் ரத்தான ரோஜா கண்காட்சி
மீண்டும் ரத்தான ரோஜா கண்காட்சி
author img

By

Published : May 12, 2021, 9:32 AM IST

மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் கலைகட்டும். அப்போது நிலவும் இதமான கால நிலையை அனுபவித்தவாறே சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க உதகை அரசு ரோஜா பூங்காவில் புகழ் பெற்ற ரோஜா கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு நடக்கவிருந்த 17ஆவது ரோஜா கண்காட்சி ரத்து செய்யபட்டது.

மீண்டும் ரத்தான ரோஜா கண்காட்சி
அதனைத்தொடர்ந்து கரோனா பரவல் குறைந்ததால் கடந்த ஆண்டு செப்டம்பரில் பூங்கா மீண்டும் திறக்கபட்டு ரோஜா கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளபட்டன. இதனால் பூங்காவில் உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகளில் சிவப்பு, வெள்ளை, ஊதா, மஞ்சள், பச்சை உள்ளிட்ட நான்காயிரம் ரகங்களிலான ரோஜா செடிகளில் பல லட்சம் ரோஜாக்கள் பூத்து குலுங்குகின்றன.

தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் இரண்டாவது முறையாக ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. இதனால் இந்த வாரம் நடைபெற வேண்டிய 17ஆவது ரோஜா கண்காட்சி இரண்டாவது முறையாக ரத்தாகி உள்ளது. இதனால் பூங்காவில் பூத்து குலுங்கும் பல லட்சம் ரோஜா மலர்கள் பார்வையாளர்களின்றி பொலிவிழந்த நிலையில் காட்சி அளிக்கின்றன.

இதையும் படிங்க: நீலகிரிக்குள் நுழைய இ பாஸ் முறை ரத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.