நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 5ஆம் தேதி முதல் ஒரு வார காலமாக வரலாறு காணாத கனமழை பெய்துவந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டதில் மொத்தம் ஆறு பேர் உயிரிழந்தனர்.
அந்தவகையில், கூடலூர் ஓவேலி பகுதியில் சீபுரம் என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சையனுதீன் என்பவர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் உதவியுடன் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேடிவந்தனர்,
இந்நிலையில் 12 நாட்களுப் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.