ETV Bharat / state

சீதோஷணம் மாறுபாடு - குன்னூரில் கொட்டித் தீர்க்கும் பனி மழை! - ooty

தொடர் மழையால் ஒரு புறம் மண் சரிவு, மரங்கள் முறிவால் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறும் நிலையில்; மறுபுறம் அதிகப்படியான குளிர் நிலவுவதால் குன்னூரில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.

மழை
மழை
author img

By

Published : Dec 27, 2022, 4:18 PM IST

குன்னூர்: நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தும் லேசான மண்சரிவு ஏற்பட்டும் உள்ளது.

மேலும் குன்னூர் - கோத்தகிரி சாலை அடுத்த வண்டிசோலை மற்றும் ஆடர்லி பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. பொது மக்கள் அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.

கடந்த சில நாட்களாகவே காலைப்பொழுது முதலே மேகமூட்டமாக காணப்படுவதால், மலைப் பகுதிகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் மெதுவாக இயக்கி வருகின்றனர். மேலும் கடும் குளிர் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் குறைந்துள்ளதால் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இருப்பினும் குன்னூர் வரும் சுற்றுலா பயணிகள் அதிகப்படியான குளிர் நிலவுவதால் விடுதிகளை விட்டு வெளியே செல்ல முடியாதபடி அறைகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வரத்து இல்லாததால் அவர்களை நம்பி, தங்கள் வாழ்வாதாரத்தை இயக்கி வரும் சிறு, குறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: Nasal Vaccine: நாசல் கரோனா தடுப்பு மருந்துக்கு ரூ. 800 விலை நிர்ணயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.