நீலகிரி அருகே குன்னூரில் தொடங்கியுள்ள 'புதியன விரும்பு' என்ற தலைப்பிலான 5 நாள் பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தபின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உரையாற்றினார்.
கோடை விடுமுறை காலத்தைப் பயனுள்ள வகையிலும் மாணவ - மாணவிகளின் தனித்திறமையினை வெளிக் கொண்டுவரும் விதமாகவும் 'புதியன விரும்பு' என்ற தமிழ்நாடு அரசின் சிறப்பு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ‘பள்ளிப் பிள்ளைகள் பாடங்களை மட்டும் கற்பதைக்காட்டிலும் மனித உரிமைகள்,தன்னம்பிக்கையுடன் வாழ்வது, நிர்வாகத் திறமை, கலை இலக்கியம் மற்றும் தன்னுள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொணரவும் தெரியாததை கற்றுக்கொள்ளவும் இந்த 5 நாள் பயிற்சி முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும் அவர் அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம் எனத்தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் அம்ரித், கல்வித்துறை அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் அறிவிப்பு