நீலகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. குன்னூர், கோத்தகிரி நகர்ப்பகுதிகளில் மக்கள் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
தடுப்பூசிக்கு பயந்த மக்கள்
ஆனால், குன்னூர், கூடலூர் பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்த பயந்து வனப்பகுதிக்குள் ஓடி ஒளிந்துக் கொள்கின்றனர். இந்நிலையில், இதற்குத் தீர்வு காணும் வகையில் குன்னூர் வனப்பகுதிகளில் உள்ள பழங்குடியின கிராமங்களில் முகாம் நடத்தும் சுகாதாரத் துறையினர் சார்பில், காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு வசதிகளுடன் மக்கள் வெளியேறாமல் தடுத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.