நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேவுள்ள கைகாரு கிராமத்திற்கு உட்பட்ட பெத்தளா கிராமத்தில் 18 கிராமங்களுக்குச் சொந்தமான ஹெத்தையம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கரோனா காலத்தில் பண்டிகை நடத்தக்கூடாது என உதவி ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை மீறியும், 18 கிராம மக்களுக்கு எதிராகவும் கூட்டத்தை கூட்டி பண்டிகையை கொண்டாடினர். இதனால், கோயிலிலுள்ள மூன்று பூசாரிகளையும் பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி 18 கிராமங்களைச் சேர்ந்தவர்கள், 2200 வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காணவிட்டால், தங்களின் குடும்ப அட்டைகளை ஒப்படைத்து, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படங்க: அய்யா வைகுண்ட தர்மபதி திருவிழா கோலாகலம்