தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தீவிரமாக பரவிவருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் காரணமாக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளை மருத்துவமனை வளாகத்தின் 100 மீட்டர் முன்பே அவர்களுக்கு கரோனா அறிகுறி உள்ளதா என சோதனை செய்யப்படுகிறது.
சோதனை முடிந்த பின்னரே அவர்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் மருத்துவமனை சார்பாக நோயாளிகளுக்கு கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை மீறிய 3 பேர் வழக்குப்பதிவு