நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் அதிக அளவில் தேயிலை தோட்டங்கள், காப்பி தோட்டங்களில் ஊடுபயிராக பலாப்பழம் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
வருடத்திற்கு ஒருமுறை விளைச்சல் தரக்கூடிய இந்த பலாப்பழம் பொதுவாக நீலகிரிக்கு வரும் கேரளா, கர்நாடக சுற்றுலா சுற்றுலா பயணிகளை நம்பியே உள்ளது.
மேலும் முதுமலை செல்லும் சாலையில் கேரளா, கர்நாடக சுற்றுலா பயணிகளுக்காக சாலையோரங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த வருடம் பலாப்பழம் ஒன்று ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனையானது. இந்நிலையில் இந்தாண்டு ஊரடங்கு உத்தரவால் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன.
இதனால், அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வழக்கத்துக்கு மாறாக இந்த வருடம் அதிகமான விளைச்சல் உள்ள நிலையில், ஒரு பலாப்பழம் மிக குறைந்த விலையான ரூ.30 வரை இருந்தும் அதை வாங்கி செல்ல கூட யாரும் இல்லாததால் சாலை ஓரங்களிலும் மரங்களிலும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இதனை நம்பியிருந்த பலாப்பழ விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.