ETV Bharat / state

ரூ.57 கோடி குத்தகை பாக்கி -  34 ஹெக்டர் நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைத்த கோல்ஃப் நிர்வாகம் - கோல்ப் கிளப் நிர்வாகம் 34 எக்டர் நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைப்பு

நீலகிரி : ரூ.57 கோடி குத்தகை தொகையை செலுத்தாததால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கோல்ஃப் கிளப் நிர்வாகம் 34 ஹெக்டர் நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைத்தது.

ooty forest land issue
author img

By

Published : Nov 13, 2019, 11:12 PM IST

உதகை அருகே பிங்கர்போஸ்ட் பகுதியில் ஜிம்கானா எனப்படும் 123 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோல்ஃப் கிளப் செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்து செயல்பட்டு வரும் இந்த கோல்ஃப் கிளப் நிர்வாகம் 78 ஹெக்டர் நிலத்தை நீலகிரி மாவட்ட வனத்துறையிடமிருந்து குத்தகைக்கு எடுத்து, அதில் கோல்ஃப் மைதானம் அமைத்து செயல்பட்டு வருகிறது.

ஒப்பந்தம் முடிந்த நிலையில், இதுவரை அந்த கிளப் நிர்வாகம் வனத்துறைக்கு 57 கோடி ரூபாயையும், வருவாய்த்துறைக்கு 15 கோடி ரூபாயையும் குத்தகை பாக்கி வைத்துள்ளது.

இதுகுறித்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கோல்ஃப் கிளப் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 34 ஹெக்டர் நிலத்தை, கையகப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கோல்ஃப் கிளப் நிர்வாகம் 34 ஹெக்டர் நிலத்தை நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி தப்பாலாவிடம் ஒப்படைத்தனர்.

கோல்ஃப் கிளப் நிர்வாகம் 34 ஹெக்டர் நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைத்தது

இதனிடையே வருவாய்த்துறைக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.15 கோடி தொடர்பான வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனால் பழமை வாய்ந்த ஜிம்கானா கோல்ஃப் கிளப் நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை துரத்திய புலி!

Intro:OotyBody:

உதகை                                    13-11-19
உதகையில் உள்ள 123 ஆண்டுகள் பழமையான ஜிம்கானா கோல்ப் கிளப் நிர்வாகம் நீலகிரி மாவட்ட வனத்துறைக்கு 57 கோடி ரூபாய் குத்தகை தொகையை செலுத்தாததால் உச்ச நீதிமன்றம் உத்தரவு படி கோல்ப் கிளப் நிர்வாகம் 34 எக்டர் நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைத்தது….
   உதகை  அருகே பிங்கர்போஸ்ட் பகுதியில் ஜிம்கான எனபடும் 123 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோல்ப் கிளப் செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்து செயல்பட்டு வரும் இந்த கோல்ப் கிளப்  நிர்வாகம் 78 எக்டர் நிலத்தை நீலகிரி மாவட்ட வனத்துறையிடமிருந்து 99 குத்தகைக்கு எடுத்து அதில் கோல்ப் மைதானம் அமைத்து செயல்பட்டு வருகிறது. ஒப்பந்தம் முடிந்த நிலையில் இது வரை அந்த கிளப் நிர்வாகம் வனத்துறைக்கு 57 கோடி ரூபாயையும், வருவாய்துறைக்கு 15 கோடி ரூபாயும் குத்தகை பாக்கி வைத்துள்ளது.
   இது குறித்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் கோல்ப் கிளப் நிர்வாகத்தின் கட்டுபாட்டில் உள்ள 34 எக்டர் நிலத்தை கையகபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து 34 எக்டர் நிலத்தை கையகபடுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். அதனையடுத்து இன்று கோல்ப் கிளப் நிர்வாகம் 34 எக்டர் நிலத்தை நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி தப்பாலாவிடம் ஒப்படைத்தனர். இதனிடையே வருவாய்துறைக்கு செலுத்த வேண்டியவ ரி பாக்கி 15 கோடி தொடர்பான வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனால் பழமை வாய்ந்த ஜிம்கானா கோல்ப் கிளப் நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பேட்டி: குருசாமி தப்பாலா – நீலகிரி மாவட்ட வன அலுவலர்

Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.