நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் 28 யானைகள் உள்ளன. இந்நிலையில் இன்று 18 யானைகளுக்கு தொரப்பள்ளியில் வனத்துறைக்கு சொந்தமான எடை மேடையில் எடை, சுற்றளவு சோதனை செய்யப்பட்டது.
இதில் காமாட்சி, சுஜய், ரகு போன்ற யானைகளின் எடை அளவீடப்பட்டன. கோடைகாலம் என்பதால் யானையின் எடையில் சராசரியாக 20 முதல் 120 வரை குறைந்துள்ளதாக வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதில் ஆறு யானைகளுக்கு மதம் பிடித்துள்ளது. நான்கு யானைகள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அழைத்து வரவில்லை. பொம்மி என்னும் ஒரு வயது ஆறு மாதமே ஆன குட்டியானை முதுமலை யானைகள் முகாமில் எடை பரிசோதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயிலில் சூடுபிடிக்கும் கோடைக்கால உணவுகள்!