நீலகிரி மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பாக மனித நேய வார நிறைவு விழா நிகழ்ச்சி உதகையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கணேஷ், திராவிடமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, 'நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் தங்களது குறைகளை யாரிடம் கேட்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கூட இல்லாமல் இருப்பது வேதனை. அலுவலர்கள் அங்கு நேரில் சென்று கேட்டாலும் குறைகளைக் கூற வெட்கப்படுகின்றனர்.
பழங்குடியின மக்களின் இந்த நடவடிக்கையால் அரசுக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையே இடைவெளி அதிகரித்து வருகிறது. இந்தநிலை மாற வேண்டும் என்பதற்காக மக்களிடையே அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த குழுக்கள் அமைக்கபட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கூடலூர் பகுதியைச் சேர்ந்த 87 பழங்குடியின மக்களுக்கு 2006 வன உரிமைச் சட்டத்தின் படி அங்கீகாரம் வழங்கபட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான கிராமமக்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: நாசாவுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவிக்கு உதவிக் கரம் நீட்டுமா அரசு!