ETV Bharat / state

குன்னூர் நீதிமன்றம் முன்பு முதியவர் தீ குளிக்க முயற்சி

குன்னூர் நீதிமன்றம் முன்பு முதியவர் நேற்று(ஆகஸ்ட் 3) தீ குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

old-man-tried-to-suicide-infront-of-coonoor-court
குன்னூர் நீதிமன்றம் முன்பு முதியவர் தீ குளிக்க முயற்சி
author img

By

Published : Aug 4, 2021, 4:22 AM IST

நீலகிரி: குன்னூர் அருகேயுள்ள காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(60). இவரது, மகன் கிருஷ்ணன் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்துவருகிறார்.

ராஜேந்திரனக்கு உடல்நிலை சரியில்லை என்று குன்னூர் அரசு மருத்துவமனையில் அவர் மகன் அனுமதித்திருந்த நிலையில், நேற்று(ஆகஸ்ட் 3) ராஜேந்திரன் திடீரென குன்னூர் கிளை நீதிமன்றம் முன்பு மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், பொதுமக்கள் அவரைத் தடுத்து நிறுத்தி முதியோர் காப்பகத்தில் அவரை ஒப்படைத்தனர்.

தொடர்ந்து காவலர்கள் நடத்திய விசாரணையில், முதியவரின் மகன் கிருஷ்ணன் அவரை சரியாக கவனிக்கவில்லை என்பதும், அதனால், மனமுடைந்து அவர் தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்துள்ளது.

மேலும், முதியவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது தெரியவந்ததால், அவருக்கு முதியோர் காப்பகத்திலே சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் தவறி விழுந்து உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.