ETV Bharat / state

குன்னூர் வெலிங்டனில் இளம் ராணுவ வீரர்களின் சத்தியப்பிரமாண நிகழ்ச்சி - Oath taking ceremony of young soldiers

நீலகிரி: குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 395 இளம் ராணுவ வீரர்களின் சத்தியப்பிரமாண நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இளம் ராணுவ வீரர்களின் சத்தியபிரமாண நிகழ்ச்சி

author img

By

Published : Feb 13, 2021, 1:19 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சியை பெறும் வீரர்கள் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களில் பணிபுரிய அனுப்பி வைக்கப்படுவார்கள். கடின பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்களில் 395 பேர் பயிற்சி முடித்து ராணுவ வீரர்களாய் பணிபுரிய சத்தியப்பிரமாண நிகழ்ச்சி இன்று (பிப். 13) நடந்தது.

பயிற்சிக்கு செல்லும் ராணுவ வீரர்கள் பகவத்கீதை, பைபிள், குரான், தேசியக்கொடி மீது உப்பு உட்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுத்துகொண்டனர். ராணுவ இசைக்குழுவின் இசைக்கு ஏற்றவாறு இளம் ராணுவ வீரர்களின் கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது.

இளம் ராணுவ வீரர்களின் சத்தியப்பிரமாண நிகழ்ச்சி

கமாண்டன்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் எட்டு சிறந்த வீரர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள் ஆகியவற்றை வழங்கி கௌரவித்தார். சிறப்பாக பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கும், கேடயம் வழங்கப்பட்டது.

கரோனா சூழ்நிலையிலும் மிக கடினமாக உழைத்த அனைத்து வீரர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கரோனா தொற்று காரணமாக ராணுவ வீரர்களின் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

இதையும் படிங்க... ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.