நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களிலும் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கரோனா பாதிப்பால் வேலை இல்லாமல், இருப்பதால் வடமாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், குன்னூர் வருவாய்த்துறை மூலம் 6 பேருந்துகளில், 173 வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை வட்டாட்சியர் குப்புராஜ், வருவாய் ஆய்வாளர் கோபி உட்பட வருவாய்த்துறையினர் மேட்டுப்பாளையம் வரை சென்று, அங்கிருந்து ரயிலில் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: சொந்த ஊர் திரும்பும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள்