நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியில் வனவிலங்குகள், பறவைகள் பெருமளவில் வாழ்ந்துவருகின்றன. தற்போது பெய்த கனமழையின் காரணமாக விலங்குகளும், பறவைகளும் இடம்பெயர்ந்துள்ளன. இதனால் உணவு, தண்ணீரைத் தேடி இவை குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்கின்றன.
இந்நிலையில், சமவெளிப் பகுதியில் இருக்கும் பறவைகள் பொதுவாக நீலகிரியின் தட்பவெப்ப நிலையினால் இங்கு வருவதில்லை. ஆனால் தற்போது முதல் முறையாக குன்னூர் பகுதிக்கு வெளவால்கள் கூட்டம் படை எடுத்துள்ளன. இந்த வெளவால்கள் குறிப்பாக வெலிங்டன் பகுதியில் உள்ள மரங்களில் கூட்டமாக இருக்கின்றன.
இதேபோல், கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் வௌவால்களால் நிபா வைரஸ் பரவிய நிலையில் தற்போது இவ்வகை பறவைகள் வருகை புரிந்து உள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பகுதியில் ராணுவ வீரர்கள், தேசிய விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதால் இவர்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.