நீலகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இதற்காக மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு இரண்டு பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் நேற்று முன் தினம் (மார்ச்.12) ஏழு பேருக்கு கரோனா உறுதியாகி உள்ளது. இது அலுவலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதோருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடியாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், உதகை-பிங்கர்போஸ்ட் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேற்று (மார்ச்.13) திடீர் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி முகக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தார்.
மேலும், அரசுப் பேருந்துகளில் பயணித்தவர்களையும் ஆய்வு செய்து முகக்கவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு அபராதம் விதித்தார். முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள், சுற்றுலாப்பயணிகள் உள்பட 50க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதித்தார்.
இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி என்ற பெயரில் மயக்க ஊசி செலுத்தி 30 பவுன் கொள்ளை!