ETV Bharat / state

‘ஜன. 7 முதல் அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்படும்’ - நீலகிரி ஆட்சியர் - ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி: மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் வருகிற ஜனவரி 7ஆம் தேதிமுதல் திறக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

திரையரங்கை திறந்துவைத்த ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

author img

By

Published : Dec 4, 2020, 3:29 PM IST

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் 17ஆம் தேதிமுதல் நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. அத்துடன் உதகையில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு 120 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் பழமையான அசம்பெலி ரூம்ஸ் என்ற திரை அரங்கமும் மூடப்பட்டது.

இந்த ஊரடங்கின்போது இந்தத் திரையரங்கில் பல்வேறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. தற்போது திரையரங்குகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ள நிலையில் இன்று (டிச. 04) முதல் அந்தத் திரையரங்கு திறக்கப்பட்டது. அவற்றை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு, அங்கு செய்யப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வுசெய்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் வருகின்ற ஜனவரி 7ஆம் தேதிமுதல் திறக்கப்படும். குறிப்பாக உதகையிலுள்ள தொட்டபெட்டா காட்சிமுனை, படகு இல்லங்கள், கொடநாடு, சூழுல் சுற்றுலாத் தலங்கள், தமிழ்நாடு சுற்றுலாத் துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்படும்.

ஆனால், முதுமலை புலிகள் காப்பகம் மட்டும் திறக்கப்படாது. அதனைத் திறப்பது குறித்து வனத் துறை அலுவலர்கள்தான் முடிவெடுக்க முடியும். சுற்றுலாத் தலங்களைக் காணவரும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வருவதற்கு, இ-பாஸ் கட்டாயம் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

திரையரங்கை திறந்துவைத்த ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

மேலும், தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டிலுள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட ஆறு சுற்றுலாத் தலங்கள் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில் தற்போது மற்ற சுற்றுலாத் தலங்களையும் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வால்பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.