தற்போது சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், அங்கிருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிவருகின்றனர். இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி சென்னையிலிருந்து நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் வந்துள்ளனர்.
விமானம் மூலம் கோவைக்கு வந்த இவர்கள் அங்கிருந்து வாகனத்தின் மூலம் குன்னூர் வந்தடைந்தனர். அங்கு அவர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, அதில் 25 வயதுடைய பெண் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதியானது.
தற்போது அவர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். அப்பெண்ணுடன் தொடர்பிலிருந்தவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் சமூக பரவலாக மாறிவருகிறதா கரோனா?